அரேபிய / பங்களாதேஷிய அரசாங்க நாதாறிகள்
'Why do Saudis kill innocents?'
இம்மாதிரி அப்பாவிகளின் உயிரை குடிக்கும் இந்த நவீன சவுதி அரக்கர்களை உலகின் எந்த நாட்டினரும் சரியாக தட்டிக் கேட்பதில்லை என்று தோன்றுகிறது! ஈராக்கிற்கு எதிராக, பல நாடுகளும் சேர்ந்து கொண்டு, பலவித தடைகளை (sanctions) முன் வைத்தன. ஆனால், சவுதி அரேபியாவின் இது போன்ற காட்டுமிராண்டித்தனமான, நியாயமற்ற செயல்களுக்கு ஒரு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாதது பொதுவான ஒரு நோயுற்ற உலகச் சூழலின் மற்றும் 'நமக்கென்ன வந்தது?' என்ற அக்கறையின்மையின் வெளிப்பாடு என்று எண்ணத் தோன்றுகிறது. இந்தியர் என்றால் எவ்வளவு இளக்காரம் பாருங்கள்! இதே போல ஒரு அமெரிக்கரின் / பிரிட்டிஷரின் (அவர் நிரபராதி ஆக இல்லாவிட்டாலும்) உயிரை துச்சமாக மதிக்க இந்த அரேபிய அரசாங்க ஓநாய்களுக்கு தைரியம் வருமா?
India mute on Jeevan Kumar's slaughter
சில நாட்களுக்கு முன் பிச்சைக்கார, சுண்டைக்காய் (நாம் வாங்கித் தந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்) நாடான பங்களாதேஷை சேர்ந்த ராணுவத்தார் ஓர் அப்பாவி கிராமத்தாரை மீட்கச் சென்ற நம் BSF காவலர்கள் இருவரை அவர்கள் எல்லைக்கு அப்பால் இழுத்துச் சென்று குரூரமாகக் கொலை செய்தார்கள். நமது அரசாங்கம் ஒரு வாரம் வேடிக்கை பார்த்து விட்டு, பலரின் கொந்தளிப்புக்குப் பின், பங்களாதேஷுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கிறது.
இம்மாதிரி நமது அரசாங்கத்தின் (எந்த கட்சியை சேர்ந்ததாக இருந்தாலும்) முதுகெலும்பற்ற அணுகுமுறையும், நமது அரசியல்வாதிகளின் உணர்ச்சியற்ற மனோபாவமும் நமது நாட்டவரை பிறர் கிள்ளுக்கீரையாகவும், கேவலமாகவும் பார்ப்பதற்கும் / நடத்துவதற்கும் வழி வகுக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
என்றென்றும் அன்புடன்
பாலா
14 மறுமொழிகள்:
http://in.rediff.com/news/2005/apr/20spec2.htm
//The Saudi Arabia government says Shahjahan smuggled brown sugar//
//Innocent job-seekers are used by the drug mafia as couriers without their knowledge//
இந்தியர்களுக்கு மட்டும் இந்நிலை என உணர்ச்சிவசப்படாமல் சவுதி, சிங்கப்பூர் உள்பட பல நாடுகளில் போதைமருந்தை கடத்திக் கொண்டு கொண்டு உள்ளே வரும் எந்த நாட்டவர்க்கும் (including westerners) இது போல் தண்டனை அளிக்கப் படுகிறது என்பதயும் அறிந்துகொள்ளுங்கள்.
சிங்கப்பூரோ, இந்தியாவோ, சவுதியோ - தவறாக கொடுக்கப்பட்ட தண்டனைக்கு முழுப் பொறுப்பு அந்நாட்டு அரசாங்கத்தையே சாரும்.
- சர்தார்
பாலா.
அகிம்சை என்பதை மிகவும் தவறாகப் புரிந்துகொண்டு கோழைத் தனமாகவே நமக்குத் தீங்கு செய்பவர்களை அணுகுகிறோம் என்று தோன்றுகிறது.
ஒரு பக்கம் அமைதிப்பேச்சுவார்த்தை என்று பசப்பிக் கொண்டு, மறுபக்கம் சத்தமில்லாமல் கார்கிலில் ஊடுருவி ஒரு போரை நடத்தி பல நூறு உயிர்களைப் பலிவாங்கிய, எதிரி நாட்டின் அதிபருக்கு இரத்தினக் கம்பளம் விரித்துப் பேச்சுவார்த்தைக்குக் கூப்பிடும் ஒரே நாடு நமது நாடாகத்தானிருக்கும்.
பெயரளவுக்கு இருக்கும் இந்திய வரைபடத்திற்கும் உண்மையான நிலவரத்திற்கும் எத்தனை வேறுபாடுகள் உள்ளன? எல்லாத்திசைகளிலும் ஆக்கிரமித்துக்கொண்டு நம் எல்லைக்குள் அநியாயமாக உட்கார்ந்திருப்பவர்களைச் சும்மா விட்டுக்கொண்டு கைகட்டி உட்கார்ந்திருப்பது பேடித்தனம்.
வேறு எதற்கும் இல்லாவிட்டாலும், சரி தவறு என்பதற்குள் போகாமல் பார்த்தால், எதிராளி ஒரு பல்லை உடைத்தால் அவனது இரண்டு பற்களையாவது உடைக்கும் இஸ்ரேலின் துணிச்சல் இந்தியாவுக்கு வரவேண்டும். நாட்டின் இறையாண்மையை அரசியல்வாதிகள் அகிம்சை என்ற பெயரால் அடகுவைப்பது எப்போது நின்று, இந்தியா முதுகெலும்போடு எழுந்து நின்று இந்த எதிரிகளை எதிர்கொள்ளப்போகிறதோ? அந்த பாரதமாதாவுக்கே வெளிச்சம்.
சவுதி அரேபியா மிடிவெல் மதச்சட்டங்களை பின்பற்றும் ஒரு காட்டுமிராண்டி நாடு என்பதில் சந்தேகமில்லை. பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய அய்க்கியத்திலும் தூக்கு தண்டனையே நீக்கப்பட்ட பின்னும் இப்படி ஒரு நாடு இருப்பது கேவலம்தான். கவனிக்க வேண்டிய விஷயம் அமேரிக்கா தான் சொல்லும் காரணங்களுக்காக படையெடுத்தால் முதலில் சவுதி அரேபியா மீதுதான் எடுத்திருக்க வேண்டும். தாலிபானை ஒத்த ஒரு bruttal மத அடைப்படைவாத ஆட்சி அங்கே நடக்கிறது. (ஈராக் அதைவிட மிக முற்போக்கான மத சார்பின்மையை ஓரளவு பின்பற்றிய நாடு). ஆனால் அமேரிக்கா சவுதிக்கு எதிராக எதுவும் செய்யாது.ஆனால் சவுதியை நியாயமற்ர ஒரு மரணதண்டனை எதிர்பதாக சொல்லும் ஒருவர் இஸ்ரேல் என்ற பயங்கர நாட்டை ஆதரிப்பது பச்சை அயோக்கியதனமன்றி வேறில்லை. கூட்டமாக அப்பாவி மக்களை கொன்று குவித்த, குவிக்கும் ஒரு நாட்டை பற்றி வியந்து நாமும் அது போல ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டு, சவுதியில் நடந்த ஒரு கொடுரமான மரண தண்டனையை பிரஸ்தாபிப்பது போன்ற ஹிபாக்ரஸி வேறில்லை.
சவுதி, சுடான் போன்ற நாடுகளை எல்லா நாடுகளும் பகிஷ்கரிக்க வேண்டும். ஆனால் அது நடக்காது. அமேரிக்காவிற்கு தன் மக்களின் சுதந்திரம் மட்டுமே முக்கியம், மற்ற அனைத்தும் அந்த நலனை முன்னிட்டு மற்றவர் சுதந்திரத்தை நசுக்குவதில்தான் நடக்கும் . இங்கேயும் சவுதியை முன்வைத்து இஸ்ரேலை நியாயபடுத்துவதுதான் நடக்கிறது.
பங்களாதேஷ் விஷயம் எனக்கு முழு விவரம் தெரியவில்லை.
//சில நாட்களுக்கு முன் பிச்சைக்கார, சுண்டைக்காய் (நாம் வாங்கித் தந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்) நாடான பங்களாதேஷை//
இதற்கு அவர்களுக்கு நீங்கள் சுதந்திரம் "வாங்கித்தராமலே" விட்டிருக்கலாம்.
T.N.Neelan அவர்களே நீங்கள் இந்திய ராணுவம் ஈழத்திலே கற்பழித்தனர், புகைவண்டியிலே கொலைசெய்தனர் என்று உண்மையெல்லாம் சொல்கின்றனரே, பார்த்து உம்மை தேசத்துரோகி என முத்திரை குத்திவிடுவோம்...
Rosavanth, vasanthan
apart from your kindal have you ever bother to see whats happening?
What is appaling is our media and peoples apathy towards our own soldiers.
Only in India this can happen,
During kargil war India treated all dead pakistani soldiers with respet and gave them a formal burial when their own country disown them. But what have we got from them brutual and barbaric treatment of our soldier,And Bangladesh gets away with this 3rd time if I am right, even the so called nationalist BJP didnt do anything,
And take this butcher of kargil,
person who was the master architect behind kargil, who overthrew democratically elected leader, in whose rule minorities suffer,gets away with all these, Indian media going oogle over this tyrant Musharaff.
When will we ever learn.
A country who doesnnt give a hoot about its selfrespect shouldn't dream of being superpower.
Its shameful!!
Neelan
yes some of these things have happened but you cleverly steer away from things,
india with all its imperfect democracy ,judicial and other office still do their duty,Justice is there.
And press do have free speech.
what kind of freedom is there in LTTE ruled places, or china or in Singapore so please stop your sermons.
The army officers were punished, same with this recent incident when a captain did fake encounters in kashmir was also court martialled,can you expect any kind of justice from place like Saudi
what is human rights situation in china,bangladesh and pakistan just do google you will know. I have many chinese,Tibetian friends listen to their stories then you will know whats going on there.
When I was attending UN based meeting dubai, i saw with my own eyes how Indians and Pakistanis are being treated there doesnt matter if you are muslim, if you are from India and Pakistan you will be treated in a different way.
சர்தார், சுந்தர், நீலன், வசந்தன், ரோசா, குழலி, K.கிறுக்கன், Rajah Simhan,
தங்கள் ஆழ்ந்த கருத்துக்களுக்கு என் நன்றிகள்.
முதலில் ரோசா:
//ஆனால் சவுதியை நியாயமற்ர ஒரு மரணதண்டனை எதிர்பதாக சொல்லும் ஒருவர் இஸ்ரேல் என்ற பயங்கர நாட்டை ஆதரிப்பது பச்சை அயோக்கியதனமன்றி வேறில்லை. கூட்டமாக அப்பாவி மக்களை கொன்று குவித்த, குவிக்கும் ஒரு
நாட்டை பற்றி வியந்து நாமும் அது போல ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டு, சவுதியில் நடந்த ஒரு கொடுரமான மரண தண்டனையை பிரஸ்தாபிப்பது போன்ற ஹிபாக்ரஸி வேறில்லை.
//
அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்கிறது என்கிறீர்களா? என்னை அல்லவே! புரிதலில் கொஞ்சம் பிரச்சினை :-)
அடுத்து, நான் அமெரிக்காவை வியந்தெல்லாம் பாராட்டவில்லை! இந்தியர்களை மதிக்காததால் (அல்லது எதிர்க்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான்!) தான், ஓர் அப்பாவி இந்தியனை(நேர்மையாகவும், வெளிப்படையாகவும் வழக்கு நடத்தாமல்) அநியாயமாக கொன்று விட்டார்களே என்ற ஆதங்கம் மட்டுமே, நான் அமெரிக்காவை ஒர்
உதாரணமாக கொண்டு வரக் காரணம்!
அடுத்து நீலன்:
//இரண்டாவது இடத்தில் இருப்பது ஈரான் (159 பேர்கள்). மூன்றாவது இடத்தில் இருப்பது வியட்நாம் (64 பேர்கள்).
நான்காவது நம் உலக தாதா அமெரிக்கா (59 பேர்கள்). அடுத்ததாக சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான்.
//
Statistics க்கு நன்றி. நான் முக்கியமாக சொல்ல வந்தது, ஓர் அப்பாவியை, நேர்மையாகவும், வெளிப்படையாகவும்
வழக்கு நடத்தாமல் சவுதி அரேபியா கொன்று விட்டு, பின்னர் சாவகாசமாக வந்து, தவறு நடந்து விட்டது என்று கூறும் இரக்கமற்ற செயலை பற்றி!
//இன்னும் உலக அமைதி என்ற பெயரில் மற்ற நாடுகளுடன் அடாவடித்தனம் செய்து தன்னிடம் உள்ள போர்
சாதனங்களை சோதனை செய்து அடுத்த நாட்டின் உயிர்களை கணக்கில்லாமல் கொன்று குவிக்கும் அமெரிக்காவையும்
சாடலாம்.
//
நான் அமெரிக்காவை ஆதரிக்கவில்லை. அவர்களிடம் சவுதிக்கு பயம் என்று சொல்ல வந்தேன்!
//நம்மிடமே நீக்கப்படவேண்டிய அசிங்கங்கள் இருக்கும்போது அடுத்தவர்களை குறைசொல்லி என்ன பயன்?.
//
நாமும் தவறுகள் செய்திருக்கிறோம் என்பது உண்மையே! அதனால், ஓர் அப்பாவி இந்தியன் கொல்லப்படும்போது,
வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டுமா என்ன?
//பாலஸ்தீனர்கள் எப்போதாவது திருப்பி அடித்தால் 'பதிலுக்கு பதில்' இஸ்ரேல் அடிக்கிறது என்று சொல்வது
இஸ்ரேலைப்பற்றிய வரலாறை அறியாதவர்களாக இருக்க வேண்டும்.
//
நான் இஸ்ரேலைப் பற்றி என் பதிவில் எதுவும் பேசவில்லை :-)
அடுத்து சுந்தர்:
//ஒரு பக்கம் அமைதிப்பேச்சுவார்த்தை என்று பசப்பிக் கொண்டு, மறுபக்கம் சத்தமில்லாமல் கார்கிலில் ஊடுருவி ஒரு போரை நடத்தி பல நூறு உயிர்களைப் பலிவாங்கிய, எதிரி நாட்டின் அதிபருக்கு இரத்தினக் கம்பளம் விரித்துப் பேச்சுவார்த்தைக்குக் கூப்பிடும் ஒரே நாடு நமது நாடாகத்தானிருக்கும்.
//
மிகச் சரியாகக் கூறினீர்கள்! நமக்குத் தான் சூடு, சொரணை, மானம் எதுவும் கிடையாதே!
அடுத்து Kகிறுக்கன்:
//yes some of these things have happened but you cleverly steer away from things,
india with all its imperfect democracy ,judicial and other office still do their duty,Justice is there.
And press do have free speech.
//
You are perfectly correct in pointing this out. We are clearly better than most with all our inadequacies and that
is the bitter truth if anybody likes or not!!!
//When I was attending UN based meeting dubai, i saw with my own eyes how Indians and Pakistanis are being treated there doesnt matter if you are muslim, if you are from India and Pakistan you will be treated in a different
way.
//
நான் இதை அனுபவித்திருக்கிறேன், ஒரு நேர்முகத் தேர்வுக்கு, அபுதாபி சென்றிருந்தபோது! ஒரு ஜோர்டானியர்,
நேரடியாகவே இந்தியர்களை மிக தரக்குறைவாகப் பேசினார் (without any provocation!)
//A country who doesnnt give a hoot about its selfrespect shouldn't dream of being superpower.
Its shameful!!
//
This is the CRUX of what I wanted to convey!!!
அடுத்து Rajah Simhan:
//Fine, when are you going to punish the Political criminals in India.
//
They need to be punished, no doubt about that, but in a democracy, public can punish them by voting them out of power (OR) the Judiciary can give punishment after a lengthy court process!! What else can be done ????
என்றென்றும் அன்புடன்
பாலா
ம்ம்... என்னதான் கவனத்துடன் எழுதினாலும், கவனங்கள் எளிதாகப் புறக்கணிக்கப்பட்டுவிடும் என்பதை ரோசாவசந்த் அவர்களின் மறுமொழியைப் படித்ததும் புரிகிறது.
அவர் குறிப்பிட்டுள்ளது.
//
இங்கேயும் சவுதியை முன்வைத்து இஸ்ரேலை நியாயபடுத்துவதுதான் நடக்கிறது
கூட்டமாக அப்பாவி மக்களை கொன்று குவித்த, குவிக்கும் ஒரு நாட்டை பற்றி வியந்து நாமும் அது போல ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டு, சவுதியில் நடந்த ஒரு கொடுரமான மரண தண்டனையை பிரஸ்தாபிப்பது போன்ற ஹிபாக்ரஸி வேறில்லை.
//
இந்த இழையில் *இஸ்ரேல்* என்ற வார்த்தையை உபயோகித்தது நான்தான். *பார்ப்பனீயம், பார்ப்பனன். பார்ப்பான்* போன்ற வார்த்தைகளோடு *இஸ்ரேல்* என்ற வார்த்தையும் இழிவான, அவமானகரமான, ஒழிக்கவேண்டிய அல்லது தண்டிக்கத்தக்க வார்த்தை என்று வலைப்பதிவு உலகத்தில்(லும்) பிரஸ்தாபிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் *இஸ்ரேல்* என்று எழுதியது என் மடத்தனம். ஆதலால் இரு விளக்கங்கள்:
1. என் பின்னூட்டம் பாலாவின் *பங்களாதேஷ்* குறித்த செய்திக்கேயொழிய சவுதியில் தலைதுண்டிக்கப்பட்ட இந்தியர் குறித்த செய்திக்கல்ல. இதைப் பின்னூட்டத்தில் குறிப்பிடாதது என் தவறு. சவுதியில் இந்தியர்கள் தலை துண்டிக்கப்படுவது இது முதல்முறையல்ல. "போதைப் பொருளைக் கடத்துவது மரணதண்டனைக்குரிய குற்றமாகும்" என்று கொட்டை எழுத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்டாலும், போதைப்பொருள் கடத்தும் சர்வதேச கும்பலின் வலையில் (இவ்வலையில் இந்தியத்தொழிலாளர்களை வளைகுடா நாடுகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு அனுப்பும் ஏஜெண்டுகளும் அடக்கம்) வகையாகச் சிக்கிக்கொண்டு வாழ்க்கையையும் உயிரையும் துறக்கும் அப்பாவி இந்தியர்கள் எத்தனையோ பேர். இதில் பெண்களும் அடக்கம். சரியான ஆவணங்களில்லாது தலைமறைவு வாழ்க்கையுடன், கிடைத்த வேலையைச் செய்து கிடைப்பதைக் கொண்டு ஜீவித்து, ஊருக்கும் போகமுடியாமல் தவிப்பவர்கள் ஆயிரக்கணக்கில் இங்கு உள்ளனர். இந்தியர்கள் மட்டுமல்ல. பங்களாதேஷிகள், இலங்கையர்கள், பிலிப்பினோக்கள் என்று ஆசியநாடுகளைச் சேர்ந்தவர்கள் நிறையபேர் துன்ப ஜீவனம் நடத்தி வருகின்றனர். இதற்குத் தீர்வு வளைகுடா நாடுகளில் இல்லை. நம் நாட்டில்தான் இருக்கிறது. விமானம் ஏறு முன்னர் (அல்லது ஏற்றப்படுமுன்னர்) துப்புரவாக எல்லாவற்றையும் பரிசோதித்து, வளைகுடா நாடுகளில் ஏற்கப்போகும் வேலை, நிறுவனம் ஆகியவற்றின் நம்பகத்தன்மையையும் சோதித்து, இடைத்தரகர்களையும் நன்கு விசாரித்து உறுதிமொழி பெற்று அந்த நபரை அனுப்பும் கடமை இந்திய அரசுக்குத்தான் உண்டு. ஆனால் செய்யமாட்டார்கள். ஏனென்றால் எல்லாமட்டங்களிலும் புழங்கும் பணம் அதைச் செய்யவிடாது. ஒரு பில்லியனில் ஒரு ஆள் செத்தால் நமக்கென்ன என்ற மனோபாவமே காரணம். ஒரு அமெரிக்கன் செத்தால் 24 மணிநேரமும் நேரடி ஒளிபரப்பும் CNN-ம் BBC-ம் நூறு இந்தியர்கள் செத்தாலும் வரிச்செய்திகளில் சொல்லிவிட்டு மறுபடி அமெரிக்காவுக்கோ ஐரோப்பாவுக்கோத் தாவிவிடுவார்கள். நமது உயிரின் மதிப்பு அவ்வளவுதான். அவர்களைச் சொல்வானேன். இன்று காலை குஜராத் ரயில் விபத்தினைக் குறித்துச் சொல்லிவிட்டு மறுபடி தொப்புள் நடனங்களுக்குத் தாவிவிட்டன நம் தமிழ்த்தொலைக்காட்சிகளும். நம்மிடம் தவறு இருக்கிறது. வெளியில் அல்ல.
2. "வேறு எதற்கும் இல்லாவிட்டாலும், சரி தவறு என்பதற்குள் போகாமல் பார்த்தால், எதிராளி ஒரு பல்லை உடைத்தால் அவனது இரண்டு பற்களையாவது உடைக்கும் *இஸ்ரேலின்* துணிச்சல் இந்தியாவுக்கு வரவேண்டும். நாட்டின் இறையாண்மையை அரசியல்வாதிகள் அகிம்சை என்ற பெயரால் அடகுவைப்பது எப்போது நின்று, இந்தியா முதுகெலும்போடு எழுந்து நின்று இந்த எதிரிகளை எதிர்கொள்ளப்போகிறதோ? அந்த பாரதமாதாவுக்கே வெளிச்சம்." என்று நான் குறிப்பிட்டதில் *இஸ்ரேல்* என்ற வார்த்தையை எடுத்துவிட்டுப் படிக்கவும். இப்போது நான் சொல்லவந்தது தெளிவாக இருக்கும் என்று நம்புகிறேன். மற்றபடி நான் இஸ்ரேலுக்கு ஆதரவாளனோ அல்லது பாலஸ்தீனத் தற்கொலைப் படைகளை ஆதரிப்பவனோ அல்ல. எனக்கு இந்தியாவில் கவலைப்படவே ஏராளமாக இருக்கிறது.
In Summary I would like to echo what kkirukkan said:
"A country who doesnnt give a hoot about its selfrespect shouldn't dream of being superpower. Its shameful!"
அனைவருக்கும் நன்றி.
ஹிப்பாக்ரஸி அல்ல
ஹிப்போபொடமாஸ்
சுந்தர் :)
அன்பின் நீலன்.
எனக்கு இப்போது குழப்பமாக இருக்கிறது.
//இனவெறி, மதவெறி, மொழிவெறி, தேசியவெறி இதுபோன்றவர்களை நான் கெட்டவர்கள் லிஸ்டில்தான் சேர்க்கிறேன். //
எல்லையில் ஊடுருபவர்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கக்கூடாது என்று நினைப்பது "தேசியவெறி"யா? இன, மத, மொழி வெறி கொண்டு அலைபவர்கள் என்னைப் பொருத்தவரை மனிதர்களே இல்லை.
ஆனால் நமது நாட்டின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் அண்டையநாடுகளின் அக்கிரமச் செயல்களையும் பொறுத்துக்கொண்டு போகவேண்டும் என்று சொல்கிறீர்களா?
சிங்கப்பூர் மட்டுமல்ல. *தவறாக ஒரு அப்பாவிக்கு மரணதண்டனை அளிக்கும் எந்த நாட்டுக்கும் கண்டனம் தெரிவிக்கவேண்டும்*.
//இதில் நமது தூதரகம் முறையாக தலையிட்டால் நிரபராதியை காப்பாற்ற முடியும். எல்லாம் முடிந்த பிறகு மற்றவர்களை குறை சொல்வதைவிட நம் தூதரகம் என்ன செய்தது என்பதுதான் எனது கேள்வி. நாம் இந்த நாதாங்கிகளை குறைசொல்வதைவிட இந்த தூதரங்களை கண்டித்தால் இனி இதுபோல பிரச்சினைகளை தடுக்க முடியும். நடந்த அநியாயத்திற்கும் நீதிகேட்க முடியும்.
//
மிகவும் சரி. இதைத் தான் *தவறு வெளியில் இல்லை. நம்மிடம் இருக்கிறது* என்று குறிப்பிட்டேன். எனக்குத் தெரிந்தவரையிலும், நான் கேள்விப்ப்பட்ட வரையிலும், இந்தியத்தூதரகம் முனைப்புடன் இந்தியர்களின் பிரச்சினையைக் களைய முற்படுவதாகத் தெரியவில்லை.
//சுந்தர் ஆரம்பித்ததால் இங்கு சொன்னேன்.//
நான் இஸ்ரேல் என்று குறிப்பிட்டது என் தவறு.
//முதலில் மனிதனை மனிதனாக பார்ப்போம். நமது நாட்டுக்குள்ளே, நமது மொழிபேசும், நமது ஊர்காரனை அவன் நம்மைவிட தாழ்ந்தவன் இழிந்தவன் என்று சொல்லும் கேவலத்தைவிட ஒரு பெரிய கேவலம் இந்தியாவுக்கு இருக்க முடியுமா?
//
இருக்கவே முடியாது. இக்கேவலத்தை நீக்குவது நமது கடமை. இதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.
அதே சமயத்தில் எல்லையில் வாலாட்டும் எதிரிகளையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்பது என் கருத்து. அதில் அசமஞ்சமாக இருக்கும் பட்சத்தில், ரொட்டியைப் பிய்த்துப்போடுவதுபோல நாட்டைத் துண்டாக்கிவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன். இப்படி நினைப்பதை *தேசியவெறி* என்று நீங்கள் சொல்வதை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஏற்றுக்கொள்ள என் மனம் ஒப்பவில்லை. மன்னிக்கவும்.
நீங்கள் இன்னும் சற்று விரிவாக எழுதுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இங்கோ அல்லது உங்கள் வலைப்பதிவிலோ.
நன்றி.
அன்புடன்
சுந்தர்.
அன்பில் நீலன்,
நான் சொல்ல நினைத்ததை சுந்தர் தெளிவாகக் கூறி விட்டார். மேலும் சில விளக்கங்கள்.
//பாலாவின் தலைப்பும் உணர்ச்சியை மட்டுமே கொட்டுகிறது. இனவாதியாக சந்தேகிக்கவும் வேண்டியிருக்கிறது. //
ஓர் அப்பாவி கொல்லப்பட்டதை படித்ததும் உணர்ச்சி வசப்பட்டது உண்மை தான்! ஆனால், "இனவாதி" குறித்த ஐயம் தேவையற்றது.
//நீங்கள் இஸ்ரேலைப்பற்றி இங்கு சொல்லவில்லைதான். ஆனால் எங்குமே(2) சொல்லவில்லை என்று நீங்கள் மறுக்காததற்கு நன்றி. //
நீங்கள் சுட்டிக் காட்டிய பின்னூட்டத்தில் ( http://dondu.blogspot.com/2005/03/1.html#111233508877458331 ) கூட நான் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒன்றும் பேசவில்லையே :-( எதற்கு இந்த அனாவசியமான குத்திக் காட்டுதல் என்று புரியவில்லை. இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனியர்கள் இருவருமே லேசுப்பட்டவர்கள் அல்லர் என்றல்லவா பின்னுட்டத்தையே தொடங்கியிருந்தேன்!!!
கடைசியாக, நமது தேசத்தை பகைவரிடமிருந்து காத்துக் கொள்ளுதல் என்ற இயல்பை "தேசிய வெறி" என்றால், அந்த வெறி இந்தியர் அனைவருக்கும் மிக மிகத் தேவை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!!!
என்றென்றும் அன்புடன்,
பாலா
நான் எழுதியது குறித்த ஒரு தெளிவுக்காக! மற்றபடி நான் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை.
1. நான் பாலாவை இஸ்ரேலை முன்வைத்து எதுவும் சொல்லவில்லை. குறைந்த பட்சம் அவர் எதுவும் சொல்லாத போது சொல்லமாட்டேன்.
2. சுந்தரின் கருத்துக்கள் எனக்கு அதிகம் தெரியாது. இந்த ஒரு பின்னூட்டத்தை வைத்து முடிவுக்கு வரவும் முடியாது. ஆனால் 'இந்தியா இஸ்ரேல் போல ஆகவேண்டும்' என்ற கோஷத்துடன், தெளிவாக இஸ்ரேலின் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் இந்திய தேசிய வாதிகள் பலர் இருக்கிறார்கள். இணையம் முழுக்க உதாரணங்கள் உண்டு. ரீடிஃபின் பல கடூரைகள், இந்த(ரீடிஃப்)கட்டுரையின் பின்னூட்டத்தில் கூட இருக்கும். இன்று (இந்துத்வ சார்பு)இந்திய தேசிய வாதிகளால் முன்வைக்கப்படும் கோஷம் இது. அதை முன்வைத்தே சொன்னேன். சுந்தர் அந்த தொனியில் பேசியதால் அவருக்கும் பொருந்தியிருக்கலாம். மற்றபடி அவர் இஸ்ரேல் பயங்கரவாத்தை ஆதரிக்கவில்லையெனில் (பாலஸ்தீனத்தையும், இஸ்ரேலையும் ஒரே தட்டில் பார்க்கும் நடுநிலை விளையாட்டு விளையாடினாலும்) நல்லதுதான்.
3. பங்களாதேஷ் விஷயத்தில் ஏன் இந்தியா சும்மா இருக்க வேண்டும் என்று புரியவில்லை. ஓரளவு கூட புரியாத, முழுவதும் தெரியாத விஷயங்கள் குறித்து நான் அவசரப்பட்டு கருத்துக்கள் சொல்வதில்லை. நன்றி!
நான் இப்போது வெளிப்படையாகவே கூறுவேன். இஸ்ரேலுடைய ஆற்றல் உலகில் எந்த நாட்டுக்கும் வராது. என்டப்பியில் அவர்கள் செயல்பட்டது இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. 1967 சண்டையில் எகிப்து ஜெனெரல் ஒருவன் தன் படைப் பிரிவை சினாய் பாலைவனத்தில் அம்போ என்று விட்டு விட்டு ஜீப்பில் தப்பித்து ஓடி இன்னொரு இடத்தில் இஸ்ரவேலர்கள் பொறியில் சிக்கிய எலியாக மாட்டிக் கொண்டு சந்தி சிரித்தான். ஒரு இஸ்ரவேல ஜெனெரல் அவ்வாறு கனவிலும் செய்ய மாட்டர் என்பதே உண்மை. மேலும் தாக்குதல்களை எதிர்க் கொள்ளும் போது மற்றவர்களின் அங்கீகாரத்துக்கு அவர்கள் தேவைக்கதிமாகக் கவலைப்படுவதே இல்லை.
நம் நாட்டு தூகரகங்கள் தூங்குகின்றன என்பது விசனத்துக்குரியதே. இஸ்ரவேலர்களின் துடிப்பில் சிறு பங்காவது நமக்கிருக்க வேண்டு என்பதே என் எண்ணமும். நாம் பாலஸ்தீனியருக்கு எவ்வளவு ஆதரவு தெரிவித்தாலும் அவர்கள் இந்தியாவா பாகிஸ்தானா என்று வரும்போது நம்மை ஆதரிக்க மாட்டார்கள். நாம் திரும்பத் திரும்ப அவமானப்படுவதுதான் மிச்சம்.
இத்தருணத்தில் சவுதிய அரசின் இன்னொரு கொள்கையைப் பற்றிக் கூறுவேன். இந்தியர் ஒருவர் சவுதியில் கார் ஏறி மரணமடைய, சவுதிய அரசு குற்றவாளியிடமிருந்துக் கணிசமானத் தொகை அபராதமாக வசூலித்தது. அது இறந்தவர் குடும்பத்துக்குக் கொடுப்பதற்காக விதிக்கப்படும் அபராதம். ஆனால் இந்தக் கேஸில் சவுதி அரசு கால் பங்குத் தொகைதான் கொடுத்தது. ஏனெனில் இறந்தவர் முஸ்லிம் அல்ல, இந்து என்பதுதான்.
இன்னொரு சமயம் தில்லிக்கு வந்து வேலைக்கு ஆட்கள் எடுத்தார்கள். வேலை அவர்கள் பாலிஸிப்படை இந்துக்களுக்குக் கிடையாது. கிறிஸ்தவர்கள் அல்லது முஸ்லிம்கள்தான் தேவை என்று நம் நாட்டில் நடத்தியத் தேர்வில் கூறினார்கள். மத அடிப்படையில் நம் மண்ணில் பாரபட்சம் காட்டும் எந்தச் செயலையும் தட்டிக் கேடக்க் கடமைப்பட்ட இந்தியா கைகட்டிக்கொண்டது. தேர்வு பெற்றவர்கள் சவுதிய விமானம் ஏறவந்தப் போது மேலும் இரு கிறிஸ்துவர்கள் அவர்கள் பெயர் இந்துக்களைப் போல் தோற்றம் அளித்ததால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பிளேன் டேக் ஆப் ஆகி மேலே ஏற ஆரம்பித்தது. அப்போது இறங்குப் பாதையில் வந்த உக்ரேனிய விமானத்துடன் மோதிக் கொண்டதில் எல்லோரும் கூண்ட்டோடு கைலாசம். விபத்துக்கடுத்த நாள் கடைசி நிமிடத்தில் உயிர் பிழைத்தவர்களின் பேட்டி ஹிந்துஸ்தான் டைம்ஸில் வந்ததும்தான் எல்லோருக்கும் சவுதிய அரசு செய்த இந்த அயோக்கிய வேலை புரிந்தது.
மேலே கூறிய இரு நிகழ்ச்சிகளைப் பற்றி அவை நடந்தப் போது நான் நேரடியாகவே செய்தித் தாள்களில் படித்தவன் என்பதையும் கூறி விடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Sorry for writing in English,
I dont have tamil writing facility from where i am writing this.
Dondu Sir
I have also read it.
But we people has a mass amensia
we forget things easily and move on.
Dear Rosa, Border Force of Bangladesh has been Perpetuating this autrocities for the past 3years. If you had seen those pictures you will lose your sleep.
They always go scott free. Thanks to spinelsess center (both BJP/congress useless have done a squat)
TN Leelan,yes anything in excess is dangerous agreed, but this kind of allowing people to getaway doesnt stand good for India in the long run, every nation is selfish when it comes to its self interest unlike India. Mushraff comes here puts on a different cap, when he gets back home, he plays a different tune, justifying kashmir and Kargil our naive people get fooled. Does India has the guts to hold him responsible for restoring Democracy, but we went and punished Nepal.
China and Pakistan cooly are now supplying arms to Nepal and thereby turning Nepal against India.
And peace at what cost, the only way we can buy peace with pakistan is when India doesnt exist as a country. If you read their army journals thats what they are going to achieve with or without Musharaffs help.
If you dont play Hardball with these guys, India is going to lose just like the blunders we did under Nehruji and Menon.
(I have himalayan respect for panditji, but that doesn't mean we cant criticize wrong judgements that cost us as a nation).
plenting of lessons can be learnt from the former repbulic of USSR.
Post a Comment